» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடக்க வேண்டும் : ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 22, ஜூன் 2026 8:11:57 PM (IST)
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிப் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்றும் அவர்களுக்கான இருக்கைகளை அனுமதிப்பதிலும் எவ்வித புகார்களுக்கு இடமளிக்காத வகையில் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்றும் இருக்கை அனுமதிப்பதிலும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இருக்கை, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கே வழங்கப்படுவதை நடத்துநர் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கனிவான முறையில் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளில் பிற பயணிகள் அமர்ந்திருக்கும் பட்சத்தில், மாற்றுத்திறனாளிப் பயணி பேருந்தில் ஏறும் போது அந்த இருக்கையை அவருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பயணியிடம் நடத்துநர் கனிவுடன் கேட்டு வாங்கித் தர வேண்டும்.
எனவே, பொதுமக்களிடமிருந்தோ அல்லது மாற்றுத்திறனாளிகளிடமிருந்தோ எந்தவித புகார்களும் வராத வண்ணம் மேற்கண்ட அறிவுரைகளைத் துல்லியமாகக் கடைபிடித்துச் செயல்படுத்துமாறு அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








