» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதில் எந்தவிதச் சாத்தியமும் இல்லை என்பதால் கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல் முடிவுகளில், முதன்முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றன.
இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக்கழகம் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்ததுடன், சட்டசபையில் தனது பெரும்பான்மையையும் நிரூபித்தது.
திமுக சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றிருந்தது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் தற்போதைய தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இத்தகைய சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கியப் பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக 14 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியத் தீர்மானமாக, திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியேறுவது என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமைத் தரப்பில், "இன்று தமிழகத்தில் நிலவக்கூடிய அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதில் எந்தவிதச் சாத்தியமும் இல்லை. இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். வரும் காலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்படும் போது, புதிய கூட்டணிகள் குறித்து முறைப்படி ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








