» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பள்ளி வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ்: அண்ணாமலை கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 12:01:49 PM (IST)
அரசுப் பள்ளி வகுப்பறையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் புகுந்து, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறைக்குள், சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீரென நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த வகுப்பறைச் சுவரில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை மாட்டியதோடு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து 'ரீல்ஸ்' எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், "கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், "ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் விஜய்யே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








