» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாயை திறங்க சிஎம்!- கருப்பு பேட்ஜ் அணிந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 10:37:59 AM (IST)

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்கள் 'வாயை திறங்க சிஎம்' என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சட்டையில் 'வாயை திறங்க சிஎம்' என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு பேட்ஜ்களை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்குள் வருகை தந்தனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்தது மட்டுமன்றி, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையிலான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் திமுகவினர் கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் "வாயில் எதாவது வருமா சிஎம்" "தூய சக்தி அல்ல, துயர சக்தி" "திரையில் ஹீரோ, தரையில் ஜீரோ" "கதறல் சப்தம் கேட்கிறதா" "தற்குறி ஆட்சி, தமிழ்நாடே சாட்சி" "ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலேயே, எதிர்க்கட்சியான திமுகவினர் முதலமைச்சரைக் குறிவைத்து இத்தகைய கடுமையான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








