» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பிலான அதிநவீன வாசிப்புக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் நேரில் பெற்றுக் கொண்டார். இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப மனுக்கள் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டன.
முக்கியக் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக அளிப்பதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தில் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், அந்த மனுக்களை உடனடியாகப் பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கைகளை மிக விரைந்து எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்புத் திட்டத்தின் கீழ், பார்வையற்ற 6 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்விப் பயன்பாட்டிற்காகத் தலா ரூ.49,800/- மதிப்பிலான நவீன வாசிப்புக் கருவிகள் (Reading Devices) வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.2.98 லட்சம் மதிப்பிலான இந்த அதிநவீன வாசிப்புக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஆனந்த் மோகன் அவர்கள் மாணவ, மாணவியருக்கு நேரில் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








