» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)
அதிமுகவிலிருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கௌதமி அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளருக்கு நடிகை கௌதமி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று ஜூன் பதினான்காம் நாள் முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து, தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், பிற அணி மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் மற்றும் நகரச் செயலாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியினையும் கூறி அதிமுகவிலிருந்து விடைபெறுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கௌதமி குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கௌதமி, கடந்த இரண்டாயிரத்து இருபத்துநான்காம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்த அரசியல் களப்பணிகளில் அதிமுகவிற்காகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், கட்சியில் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிமுகவிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








