» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)
சேலம் மாநகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை வைத்தே மிரட்டிப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி வந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மணிகண்டன் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலத்தை அடுத்த நெய்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சேலம் மாநகரக் காவல் ஆணையருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தனர். அந்த மனுவில், மணிகண்டன் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திக்கொண்டே, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ரகசியமாக விற்று வருவதாகவும், ஏற்கனவே இவர் மீது பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், பல பெண்களை ஏமாற்றிப் பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அதனைத் தனது கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி மிரட்டுவதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இப்பரபரப்பான சூழலில், பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண், வட்டிப் பணக் கொடுமையால் சேலம் பால்மார்க்கெட் பகுதியில் நின்றபடி அழுதுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஆறுதல் சொல்வது போல நடித்து, நிதி நிறுவனம் (பைனான்ஸ்) மூலம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணைப் பெற்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் பேசி வந்த மணிகண்டன், ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பழகியுள்ளார்.
ஒருமுறை ஓமலூரில் உள்ள தங்கு விடுதி அறையில் மணிகண்டனின் கைபேசியை அந்தப் பெண் எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் போனில் சுமார் 8,000 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் மணிகண்டன் வீடியோ காலில் ஆபாசமாகப் பேசுவதும், உடலுறவு கொள்வதுமான காட்சிகள் இருந்துள்ளன. இதனால் பயந்துபோன அந்தப் பெண் அவரிடமிருந்து விலகியுள்ளார்.
இருப்பினும் மணிகண்டன் அந்தப் பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு, பழையபடி பழக வேண்டும் என்றும், இல்லையென்றால் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும், தனது நண்பர்களுடனும் பழக வேண்டும் என்று கூறிப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைப்போலப் பல பெண்கள் இவனால் சீரழிந்துள்ளதாக அந்தப் பெண் அந்த ஆடியோவில் கதறியிருந்தார்.
போலீஸ் அதிரடி வளைப்பு மற்றும் கைது
இந்த ஆடியோ ஆதாரம் வைரலானதைத் தொடர்ந்து, சேலம் மாநகரக் காவல் ஆணையர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் அதிரடியாகக் களமிறங்கினர். நெய்காரப்பட்டியில் உள்ள மணிகண்டனின் வீட்டைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, 3 பெண்களுடன் அவர் இருக்கும் வீடியோ காட்சிகளும், ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாகப் பேசும் காட்சிகளும் முதற்கட்டமாகச் சிக்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகாரைப் பெற்று, மணிகண்டனை இரவோடு இரவாகப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளதால், மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








