» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது தொடர்பாக மின்வாரியத்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்படுகின்றன.சென்னையில் மின்வெட்டு மக்களை பாடாய்படுத்துகிறது. இரவு நேர தூக்கம் கலைவதால் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மின்வாரியத்தை பலரும் திட்டி தங்களுடைய ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில், மின்வெட்டு குறித்து மின்வாரியத்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான்; அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ தயங்கவில்லை. எனினும், இது மின்சார விநியோகத்தினால் ஏற்படும் பிரச்சினை அல்ல, மின் பகிர்மானத்தால் மட்டுமே இப்பிரச்சினை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் திடீரென அதிகரிக்கும் மின்சாரத் தேவை, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்படும் கூடுதல் சுமை போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் மட்டுமே இந்தத் தடங்கல் ஏற்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இறுதிப் பயனாளிக்குக் கொண்டு சேர்க்கும் உள்ளூர் உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தமே இதற்குக் காரணம். அனைத்தையும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்னைகளை சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








