» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மே 11 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சனி 2, மே 2026 11:12:22 AM (IST)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், நேர்காணல் இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (Integrated Technical Services) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை அறிவித்துள்ளது.

பணிகள்: உதவிப் பொறியாளர், உதவி கணக்கு அலுவலர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் உள்ளிட்ட 14 வகையான பதவிகள்.

கலந்தாய்வு தேதிகள்: மே 11 முதல் மே 15 வரை.

தேர்வு பின்னணி: இதற்கான தேர்வு கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜனவரி 23-ல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு, அடுத்தகட்டமாக நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்குத் தகுதியான தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான தேர்வர்கள் தங்கள் அழைப்பாணையை (Memo) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாகத் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். தபாலில் அழைப்பாணை அனுப்பப்பட மாட்டாது.

தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். தவறினால் எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory