» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வைரலாகும் பதிவு: விஜய்க்கு இளையராஜா மறைமுக வாழ்த்து?
சனி 2, மே 2026 10:52:37 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சிறு வயதுப் புகைப்படம் அடங்கிய பாடலை இசைஞானி இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் முறையாகக் களம் கண்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகளில், குறிப்பாக 'ஆக்சிஸ் மை இந்தியா' கணிப்பின்படி, விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒரு பாடலைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு...’ என்ற பாடலை அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பாடலில் நடிகர் விஜய்யின் சிறு வயதுப் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் ராதிகா மற்றும் ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரபாப்பான அரசியில் சூழலில் "நாடு உன்னை நம்பிக் காத்திருக்கிறது" என்ற வரிகள் அடங்கிய பாடலை இளையராஜா பகிர்ந்திருப்பது, விஜய்க்கு அவர் அளிக்கும் மறைமுக ஆதரவாகவும் வாழ்த்தாகவும் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மே 8 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
சனி 2, மே 2026 5:31:32 PM (IST)

திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்றாலும் விஜய் வலிமை பெறவில்லை : திருமாவளவன் கருத்து!
சனி 2, மே 2026 5:19:09 PM (IST)

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)

பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கடும் கண்டனம்!
சனி 2, மே 2026 3:27:51 PM (IST)

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!
சனி 2, மே 2026 12:12:30 PM (IST)









