» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் நாள் தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூனியூர் பகுதியில் தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா இன்று (13.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 6,027 வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவிற்கு விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான நேற்று (12.04.2026), மாவட்டத்தில் மொத்தம் 2,340 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, 6027 வாக்காளர்கள் தபால் வாக்குபதிவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்குட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் 12.04.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றைய தினம் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 352 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்காளர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 305 வாக்காளர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 199 வாக்காளர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மாற்றுதிறனாளி வாக்காளர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 252 நபர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 261 நபர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 101 நபர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 122 நபர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 188 நபர்களும் என திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2340 வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)

தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!
செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
திங்கள் 18, மே 2026 5:51:18 PM (IST)

தவெக ஆட்சியின் உண்மை முகம் போகப் போக வெளிவரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 5:13:06 PM (IST)










