» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - தவெக போட்டி? விஜய் பேச்சுக்கு பதிலளிக்கத் தயாரில்லை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:50:26 AM (IST)

தமிழக அரசியலில் தற்போது திமுக மற்றும் தவெக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக விஜய் கூறி வருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகப் பரமக்குடியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசியல் கள நிலவரங்கள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசியலில் தற்போது திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக விஜய் கூறி வருவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "அதற்குப் பதில் தெரிவிக்க நான் தயாராக இல்லை" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். மேலும், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்கள் குறித்த செய்திகளைத் தான் படிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கும் தில்லிக்கும் (பாஜக) இடையேதான் போட்டி என்று தொடர்ந்து கூறி வருவது ஏன் என்ற கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்: "அதிமுகவின் முகமூடியைப் போட்டுக்கொண்டுதானே பாஜக தமிழகத்திற்குள் நுழையப் பார்க்கிறது; அதனால் நான் சொல்வதுதான் உண்மை. தமிழகத்தின் நலனுக்கும் தில்லியின் ஆதிக்கத்திற்கும் இடையேதான் இந்தப் போட்டி."

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய முதல்வர், அவர் தோல்வி பயத்தால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டதாகவும், அந்த விரக்தியிலேயே தொடர்ந்து பேசி வருவதாகவும் சாடினார்.

தமது வழக்கமான நடைப்பயிற்சியின் போது மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு, திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் பெரும் ஆதரவை வெளிப்படுத்துவதாக உள்ளது என முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முன்னதாக, 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்துப் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆமாApr 12, 2026 - 07:07:22 PM | Posted IP 172.7*****

துண்டு சீட்டு மொதல்வர்க்கு பதில் அளிக்கத் தெரியாதே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory