» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "ஒரு மனிதனுக்கு மீனைத் தர்மம் செய்வதை விட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்ற பழமொழி உண்டு. தொடர்ந்து இலவசங்களை வழங்கிக்கொண்டே இருந்தால், மக்கள் மேலும் பலவற்றை எதிர்பார்க்கும் நிலை உருவாகும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்தையும் சாடவில்லை; இது நாடு தழுவிய போக்காக உள்ளது."அரசாங்கங்கள் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எந்தக் கட்சியாக இருந்தாலும், இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி எங்கிருந்து திரட்டப்படும், பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு என்ன என்பது குறித்த தெளிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
மாநிலத்தின் நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல் அறிவிக்கப்படும் கவர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். "நிதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பட்ஜெட்டை எவ்வாறு திட்டமிடப் போகிறீர்கள்?" என்று கேட்க வேண்டியது அவசியமாகும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டிருப்பதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் பெண்கள், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது.
இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல என்றும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இம்முறை மசோதா முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)

தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!
செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)










