» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரத் தயாரா? விஜய்க்கு பாஜக சவால்!
சனி 11, ஏப்ரல் 2026 3:29:40 PM (IST)
'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில், உண்மையை நிலைநாட்ட சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? என்று பாஜக சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் மக்களிடம் எடுபடாது. இப்படம் இணையத்தில் வெளியானதால் தயாரிப்பாளருக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களின் அனுதாபத்தைப் பெற்று வாக்குகளைச் சேகரிக்க விஜய் நாடகமாடுகிறார்.பாஜக மீதும், மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் விஜய் தரப்பு பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. தமிழகத்தின் பட்டியல் சமூகப் பிரதிநிதியாக நேர்மையுடன் செயல்படும் மத்திய அமைச்சரை அவமதிக்கும் நோக்கில் அவதூறு பரப்பிவிட்டு, 'அம்பேத்கர்தான் எங்கள் கொள்கைத் தலைவர்' என்று கூறுவதற்கு விஜய் வெட்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? என்று பாஜக சவால் விடுக்கிறது. திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்து இதுவரை தமிழகக் காவல்துறையிலோ அல்லது தணிக்கைத் துறையிலோ (Censor Board) ஏன் புகார் அளிக்கப்படவில்லை?
"படம் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகனே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது. அவர் மீது பாஜக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்." மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரையும் விஜயையும் ஒப்பிட்டுப் பேசி, அதிமுக வாக்குகளைப் பிரிக்கலாம் என்றும், பாஜகவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களைக் குழப்பலாம் என்றும் ஆதவ் அர்ஜுனா கருதுகிறார். அவரது இந்தத் தரம் தாழ்ந்த பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.
திமுகவுக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டனர். திமுகவை வீழ்த்த நினைக்கும் வாக்காளர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)

தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!
செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
திங்கள் 18, மே 2026 5:51:18 PM (IST)

தவெக ஆட்சியின் உண்மை முகம் போகப் போக வெளிவரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 5:13:06 PM (IST)










