» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக, அதிமுக-வுக்கு ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம்!
சனி 11, ஏப்ரல் 2026 11:15:50 AM (IST)
புதிய தமிழகம் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எங்களது ஆதரவு கிடையாது” என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது: தனித்துப் போட்டியிடுவது புதிய தமிழகம் கட்சிக்குப் புதிய ஒன்றல்ல. கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக வெற்றிபெற எடப்பாடி பழனிசாமி வழிவகுத்தார்.கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து அவர் கூறுகையில், "இந்தத் தேர்தலுக்காக எங்களோடு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவீர்கள் என்று விருப்பப் பட்டியலை எழுதி வாங்கிய பின்னரும், திடீரென கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது எனப் பழனிசாமி அறிவித்துவிட்டார். கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வளரக் கூடாது என்ற நோக்கிலேயே அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது,” எனக் குற்றம் சாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், "அவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது,” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் யாருடைய வாக்கையும் பிரிக்கவில்லை; மாறாக, தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்துகிறோம். நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி: மே 5-இல் தண்டனை அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:29:47 PM (IST)

வெற்றிச் சான்றிதழுடன் பனையூர் வாருங்கள்: த.வெ.க. வேட்பாளர்களுக்கு விஜய் உத்தரவு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:22:33 PM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)









