» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாகக் கேரளாவுக்குக் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் தொடர் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட எல்லை வழியாகக் கனிமங்களை ஏற்றிச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அதிரடித் தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாகக் கேரளாவிற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.ஏப்ரல் 7: தோவாளை வட்டம் திருப்பதிசாரம் பகுதியில் நடந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் ஏப்ரல் 9 அன்று உயிரிழந்தார். அன்றைய தினமே வில்லுக்குறி பகுதியிலும் விபத்து நேரிட்டது.
ஏப்ரல் 9: தக்கலை காவல் நிலையம் அருகே அதிவேகமாகச் சென்ற சரக்கு வாகனம் (TN 18 BH 2436), இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சட்டம் - ஒழுங்கு பாதிப்பு: கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவும், ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும் இயக்கப்படுவதால் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. மாற்று வழி இல்லாத நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனிம வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
விபத்தில்லாச் சாலை போக்குவரத்தை உறுதி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மாவட்ட ஆட்சியர் பின்வரும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்:
"களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான (NH 47) தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டிற்கு வரும் வரை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளா மாநிலத்திற்கு கனரக வாகனங்கள் மூலம் கனிமங்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது."
இந்தத் தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். பலமுறை எச்சரித்தும் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இந்த உத்தரவு ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி: மே 5-இல் தண்டனை அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:29:47 PM (IST)

வெற்றிச் சான்றிதழுடன் பனையூர் வாருங்கள்: த.வெ.க. வேட்பாளர்களுக்கு விஜய் உத்தரவு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:22:33 PM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)









