» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லைக்கு பதில் சாத்தூரில் போட்டி: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாற்றம்!
வெள்ளி 27, மார்ச் 2026 5:14:00 PM (IST)
பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்துள்ளார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். இந்த முறை நான் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளேன்" எனத் தெரிவித்தார்.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியலில் ஏற்கனவே திருநெல்வேலிக்கு பதிலாக சாத்தூர் இடம்பெற்றிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த அறிவிப்பு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தொகுதி மாற்றத்திற்கான பின்னணி:
நயினார் நாகேந்திரன் தனது சொந்த மாவட்டமான நெல்லையை விட்டு விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதிக்கு மாறியதற்கு அரசியல் விமர்சகர்கள் இரு முக்கியக் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்:
நெல்லை 'சென்டிமென்ட்': 1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற எவரும் அடுத்த தேர்தலில் மீண்டும் வென்றதாகச் சரித்திரம் இல்லை. 2001 முதல் தொடர்ந்து அங்கு போட்டியிட்டு வரும் நயினார் நாகேந்திரனுக்கும் இந்தச் சூழல் பொருந்தும் என்பதால், 'சென்டிமென்ட்' காரணமாக அவர் தொகுதி மாறியதாகக் கருதப்படுகிறது.
சாத்தூர் தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை இலக்கு வைத்து அவர் அங்கு களம் இறங்குகிறார். இதற்கான ரகசியப் பணிகளை கடந்த 6 மாதங்களாகவே அவர் அங்கு மேற்கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமாகா 5 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தாமரைச் சின்னத்தில் போட்டி!
வெள்ளி 27, மார்ச் 2026 4:49:21 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர்கள் அறிவிப்பு: பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் போட்டி!
வெள்ளி 27, மார்ச் 2026 4:42:10 PM (IST)

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: நெல்லை, குமரி உட்பட 127 தொகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 27, மார்ச் 2026 3:49:47 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)








