» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!

வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)



திருநெல்வேலி மாநகரக் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் குற்ற வழக்குகளைத் துப்பறியும் பணிக்காகப் புதிய மோப்ப நாய் குட்டி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகரக் காவல் ஆணையர் பெயர் சூட்டி வரவேற்றார்.

நெல்லை மாநகரக் காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணியில் ரெமோ, கூப்பர் என 2 மோப்ப நாய்கள், குற்ற வழக்குகளை துப்பறியும் பணியில் பரணி என 1 மோப்ப நாய் போதை பொருட்கள் துப்பறியும் பணியில் லக்கி என 1 மோப்ப நாய் என மொத்தம் 4 மோப்ப நாய்கள் பணியில் உள்ளது.

இந்த நிலையில், குற்ற வழக்குகளைத் துப்பறியும் பணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிதாக ஒரு நாய் குட்டி வாங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகரப் போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று (மார்ச் 26, 2026) அந்த நாய் குட்டிக்கு 'ப்ரௌனி' (Brownie) எனப் பெயர் சூட்டி முறைப்படி காவல் துறையில் இணைத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, மோப்ப நாய்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கவும், அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் சிறப்புக் கவனம் செலுத்தவும் மோப்ப நாய் பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் நெல்லை மாநகரப் போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) விஜயகுமார் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். புதிய வரவான ப்ரௌனி, உரிய பயிற்சிகளுக்குப் பிறகு விரைவில் களப்பணியில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory