» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 ஒதுக்கீடு!

திங்கள் 23, மார்ச் 2026 4:13:03 PM (IST)



அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதன் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.

இதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் முழுமையாக நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

MANIKAMMar 24, 2026 - 10:34:30 AM | Posted IP 162.1*****

பாஜகவை கூட்டணியில் சேர்த்த காரணத்துக்காக காலமெல்லாம் வருந்துவார் எடப்பாடி பழனிசாமி

KANNANMar 23, 2026 - 06:55:08 PM | Posted IP 172.7*****

தோல்வி பங்கீடு?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory