» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள்: சட்டம் ஒழுங்கு சீரழிவு - பாஜக விமர்சனம்!
திங்கள் 16, மார்ச் 2026 3:57:30 PM (IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டிற்குள் கஞ்சா போதையில் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மருத்துவர்களையும் நோயாளிகளையும் மிரட்டிய சம்பவம் குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்."காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்பான இடமான மருத்துவமனைக்குள்ளேயே மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது."
சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனம்:
"போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். போதை வீரியத்தில் பொதுமக்களைத் தாக்குவது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது."
"தமிழகத்தில் போதை நடமாட்டமே இல்லை என வாய்கூசாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவினரைக் கண்டால் கோபமே எழுகிறது. சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால், போதையில் ரகளை செய்பவர்களைக் கண்டிக்கக்கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இத்தகைய நாடகக்காரர்களின் கரங்களில் இனி அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது," என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தவெக திட்டவட்டம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:01:58 PM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)








