» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிலிண்டர் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சிலிண்டர் கையிருப்பு விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தற்போது அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இருப்பினும், வணிக ரீதியிலான சிலிண்டர் தேவை அதிகரித்து வருவதால், தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய மத்திய அரசைத் தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: அமெரிக்கா - ஈரான் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் அங்கு சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்குத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டும். இவ்வாறாக அந்தப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)

தம்பிதுரை கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:21:31 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் : தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 12:14:39 PM (IST)








