» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!

திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்ரித் பாரத் ரயில்களில், மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம் - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி ஆகிய மூன்று வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நாகர்கோவில் - மங்களூரு ரயிலுக்கு (16329/16330) ரயில்வே வாரியம் சார்பில் கேரள மாநிலத்தின் தலசேரி, சாஸ்தான்கோட்டை மற்றும் வடகரா ஆகிய மூன்று நிலையங்களில் புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிறுத்தங்கள் மார்ச் 3 (நாகர்கோவிலில் இருந்து) மற்றும் மார்ச் 4 (மங்களூருவில் இருந்து) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளன. கேரளாவில் சிறிய நிலையங்களுக்குக் கூட நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையங்களான இரணியல் மற்றும் குழித்துறை ஆகியவற்றுக்கு அம்ரித் பாரத் ரயில்களில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.

திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலுக்கும் இரணியலில் நிறுத்தம் இல்லை.ஏற்கனவே திருநெல்வேலி - ஜாம்நகர் ரயிலுக்கு, குழித்துறையை விட வருவாய் குறைந்த கேரளாவின் பாறசாலை நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டு, குழித்துறை புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லிக்குச் சென்று ரயில்வே வாரிய அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து, வருவாய் மற்றும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் வாதிட்டுத் தங்கள் தொகுதிகளுக்குத் தேவையான நிறுத்தங்களைப் பெற்று வருகின்றனர். "வெறுமனே கோரிக்கை மனுக்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், கேரளா எம்.பி.க்களைப் போல கன்னியாகுமரி எம்.பி.யும் தீவிரமாகப் போராடி, ரயில்வே வாரியத்திடம் இருந்து புதிய நிறுத்தங்களுக்கான ஆணையைப் பெற வேண்டும்" என மாவட்ட பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory