» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: மார்ச் 15-ல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

திங்கள் 9, மார்ச் 2026 3:52:31 PM (IST)

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் 15-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), மற்றும் கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலமும் முடிவுக்கு வருகின்றன.

இதனை முன்னிட்டு, தமிழகத்தின் 234 தொகுதிகள் உட்பட 5 மாநிலங்களில் உள்ள மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகை தந்தார். அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (மார்ச் 11) திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் டெல்லி திரும்பிய பிறகு, தேர்தல் தேதிக்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வரும் மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory