» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்

திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளிலிருந்து, 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27,783 பேரும், சிறைக்கைதிகளாக 281 பேரும் தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.மார்ச் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலத் தேர்வும், அதனைத் தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான தேர்வுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறும். தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 44,624 ஆசிரியர்களும், பறக்கும் படையில் (கண்காணிப்புப் படை) 4,540 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பதிலாகத் தேர்வை எழுத (Scribes), 7,465 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வினை எதிர்கொள்ள மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory