» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!

புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)



குமரி மாவட்டத்தில் வாக்காளார்களின் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, குளச்சல் சட்டமன்ற தொகுதி வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட மாடத்தட்டுவிளை, கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட உடையார்விளை பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட, இரட்டை பதிவு, இடம் பெயர்தல், கண்டறியப்படாத வாக்காளார்களின் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறுஆய்வு மேற்கொள்வதை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (10.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் கணக்கீட்டு காலம் நாளை (11.12.2025)-யுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியலானது இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலானது சிறப்புத் தீவிர திருத்தப்பணி கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான 16.12.2025 அன்று வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பட்டியல் 11.12.2025 அன்று கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் உண்மை நிலையினை கண்டறிவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் 85 + /ASD என்ற மெனுவை கிளிக் செய்யும்போது அந்த பாகத்தில் உள்ள 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் மட்டும் காண்பிக்கும். அதிலுள்ள வாக்காளர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் குறிப்பிட்ட பாகத்தில் வசிப்பவர்களாக இருந்தால் பயன்பாட்டில் சரி என்று கொடுக்கும்போது வாக்காளரின் விவரங்கள் அதே பாகத்தில் இடம் பெறும்.

வாக்காளர் இடம் பெயர்ந்து இருந்தாலோ, இரட்டை பதிவு, இறப்பு, கண்டறியபட இயலாத கணக்கீட்டு படிவங்களின் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் Dupilcate elector Verification என்ற மெனுவில் கிளிக் செய்யும்போது இரட்டை பதிவு (பெயர், உறவினர் பெயர், வயது ஆகியவை ஒன்றாக பொருந்தக்கூடிய நபர்கள் ஒரு பாகத்திற்குள், ஒரு தொகுதிக்குள், மாநிலத்திற்குள்) என சந்தேகப்படும்படி பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் நபர் உங்கள் பகுதியில் வசிக்கிறாரா அல்லது வேறு இடத்தில் அவரது பதிவு செய்திருக்கிறாரா என்பதை உறுதி செய்து உங்கள் பாகத்தில் வசிக்கிறார் எனில் "N0 Action Required” என்ற Option-ஐ தேர்வு செய்ய வேண்டும். 

அவரது பெயரை நீங்க வேண்டுமெனில் Mark uncontrollable -ல் கொடுப்பதற்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்பட்டு இதுகுறித்து விவாதங்கள் மேற்கொண்டு அதனை எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்படும். மேற்படி கணக்கீட்டு படிவங்களின் மீது உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனைகளை உரிய காலத்திற்குள்ளாக மனுக்கள் வழங்கி நிவர்த்தி செய்யலாம்.

எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முழுமையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பினை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 16.12.2025 முதல் 15.01.2026 வரை ஆகும். இந்தக் காலப்பகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் இன்று குளச்சல் சட்டமன்ற தொகுதி வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட மாடத்தட்டுவிளை, கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட உடையார்விளை பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 85 வயதுக்கு மேற்பட்ட, இரட்டை பதிவு, இடம் பெயர்தல், கண்டறியப்படாத வாக்காளார்களின் கணக்கீட்டு படிவங்களை மறுஆய்வு மேற்கொள்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். ஆய்வின் போது, குளச்சல் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory