» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிறிஸ்துமஸ் புத்தாண்டு: தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:33:27 AM (IST)
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் சட்டம் 1884-இன் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 10.12.2025- ஆம் தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் இதர ஆவணங்களுடன், உரிய கணக்கு தலைப்பின் கீழ் (Head of Account: 0070-other Administrative services 60-other services 103 Receipts under Explosive Act 01 Collector of Distric Authorities E-challan code no. 0070-60-109-AA-22738) அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (செலான்) இணைக்க வேண்டும்.
மேலும் மனுதாரர், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும் விண்ணத்தாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வருகிற 10.12.2025-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 2025 டிசம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கேட்டுக்கொள்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









