» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!

வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி ஆய்வு செயதார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம் போன்ற இடங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 11.12.2025 வரை கால நீடிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் கணக்கீட்டுப் படிவங்கள் 100% Blo mobile App ல் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளர்களில் முந்தைய 2002 மற்றும் 2005 சிறப்பு தீவிர திருத்தத்தின் போது உள்ள வாக்காளர்கள் விபரங்களை தெரிவிக்காதவர்களுக்கு வாக்காளர்கள், வாக்காளர்களின் பெற்றோர்கள்/பெற்றோர்களின் பெற்றோர் விவரங்களை கண்டறிந்து பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 100% முடிந்துள்ளது. மேலும் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இறப்பு போன்ற இனங்களில் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். 

இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூர் காமராஜர் நகர் பகுதி மற்றும் தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளிலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு சிங்கம்பத்து, இடையன்குளம், முன்னீர்பள்ளம், ஆகிய பகுதிகளிலும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலும் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இறப்பு தொடர்பான சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை மற்றும் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory