» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
திங்கள் 1, டிசம்பர் 2025 10:30:10 AM (IST)
இலங்கையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.பாதுகாப்பாக தங்கவைக்க போதிய முகாம்கள்கூட இல்லாத நிலையில் மட்டைப்பந்தாட்ட மைதானத்தில்தங்க வைக்கப் பட்டுள்ள நிகழ்வு மனதை கனக்கச் செய்கிறது. இப்பேரிழப்பில் தங்களது உடமைகளை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக உரிய வாழ்வாதார உதவிகளைப் புரிய வேண்டும்.
மேலும், இலங்கை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக உணவுகூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக தாயகம் மீட்டுவரவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உடனடியாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









