» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிட்வா புயல் சென்னையை நெருங்கும் கரையைக் கடக்காது: வானிலை ஆய்வு மையம் தகவல்!
சனி 29, நவம்பர் 2025 5:38:36 PM (IST)

டிட்வா புயலாகவே சென்னையை நெருங்கும். கரையைக் கடக்காது. கடலோரத்தை ஒட்டி செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வங்ககடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் தூரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. சென்னைக்கு 350 கி.மீட்டர் தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு 150 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும் டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோரத்தை ஒட்டி செல்லும். டிட்வா புயலாகவே சென்னையை நெருங்கும். கரையைக் கடக்காது. கடலோரத்தை ஒட்டி செல்லும்” என்றார். இதற்கு முன்பு டிட்வா புயல் சென்னையை நெருங்கும் போது தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என முன்பு கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது புயலாகவே தென்மேற்கு வங்க கடலை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)










