» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தயார் நிலையில் மின்சார வாரியம்..!!
சனி 29, நவம்பர் 2025 5:13:09 PM (IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
3.30 லட்சம் மின் கம்பங்கள், 9,568 கி.மீ. மின் கம்பங்கள், 13,029 மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் இருப்பதாகவும் மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)










