» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவை குறைத்து மதிப்பிடமுடியாது: கணிசமாக வாக்குகளை பெறும்: கார்த்தி சிதம்பரம் கருத்து!
சனி 29, நவம்பர் 2025 10:58:11 AM (IST)

தவெகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அக்கட்சியும் கணிசமாக வாக்குகளை பெறும். என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்தார்.
சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டது. நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தனர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் விலகிய இயக்கத்துக்கு பாதிப்பும், அவர் சேர்ந்த இயக்கத்துக்கு பலமும் ஏற்படும். தவெகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அக்கட்சியும் கணிசமாக வாக்குகளை பெறும். வரும் தேர்தலில் 3 முனைப் போட்டி என்று கூற முடியாது. சீமானும் களத்தில் உள்ளார். எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்கலாம்.
2026 மார்ச் மாதம்தான் தேர்தல் வரும் என்பதால், சிறப்பு தீவிர திருத்தப் பணி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பிஹாரைப் போல தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறையாது.இறந்து போனவர்கள்தான் நீக்கப்படுவர். தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறான கருத்து. பாஜகவுக்கு யாரைத் தலைவராக நியமித்தாலும் அக்கட்சியை தமிழக மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த், ஆணையர் அசோக்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ், பிரியங்கா, வீனஸ் ராமநாதன், சி.எல்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முறையாக அழைக்கவில்லை என்று கூறி பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









