» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!

வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் விபரம்

1. Senior Treatment Supervisor (STS) -1
2. TB Health Visitor -2
3. Data Entry Operator (BPMU) -1
4. Mid-level Health Provider -2
5. Cleaner -1
6. District Quality Consultant -1

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இணையதளத்தில் அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ, தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory