» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்னொருவருடன் திருமணம் நிச்சயம்: ஆசிரியையை வெட்டிக் கொன்ற காதலன்!
வியாழன் 27, நவம்பர் 2025 3:57:58 PM (IST)
தஞ்சை அருகே இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரத்தில் ஆசிரியையை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்கூடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே ஊரில் அவரது சமூகத்தை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் (29) என்பவரும் கடத்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் வற்புறுத்தலின்படி, அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த விபரத்தை காவியா அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்து உள்ளார்.
இதே போல் நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா காட்டியுள்ளார். இதனால் அஜித் குமார் கோபத்தில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) காலை காவியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது அவரை அஜித்குமார் வழி மறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை குத்தி கொலை செய்துள்ளார்.
காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீஸார், காவியாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









