» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டசபை அரங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர், நயினார் நாகேந்திரனின் இருக்கைக்கு சென்று 10 நிமிடம் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education




Thoothukudi Business Directory