» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு

வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)



சுசீந்திரம் பெரிய குளம் பகுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சுசீந்திரம் பெரிய குளம் பகுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், இ.வ.ப., மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆகியோர் முன்னிலையில் இன்று (03.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- "கன்னியாகுமரி மாவட்டத்தினை முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றிடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியிலுள்ள பெரிய குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடி மற்றும் அதன் கொடிகளை முழுமையாக அகற்றி குளத்தினை தூய்மைப்படுத்துவதோடு குளத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆகாய தாமரைகளை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரிய குளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் சுசீந்திரம் பெரியகுளத்தில் காலநிலைக்கேற்ப உள்ளுர் பறவைகள், தமிழ்நாட்டிற்குட்பட்ட பிறமாவட்டகள், பிறமாநிலங்களை சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கம், தட்பவெப்பநிலை உள்ளிட்ட காரணங்களுக்கான இங்கு வருகை தருகின்றன. குஞ்சு பொரித்து அக்குஞ்சுகள் பறக்க தொடங்கியது அந்தந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்கின்றன. மேலும் பெரியகுளத்தின் கரையோரங்களை சீர்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பெரியகுளத்தினை சுற்றுலா தளமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட வனத்துறை உள்ளிட்ட துறைகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

ஆய்வில் EMAT திட்டப்பணிகள் தொடர்பாக பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சுசீந்திரம் குளத்தின் கிழக்கு கரைப்பகுதியினை மேம்படுத்திடும் வகையில் தாங்குசுவர் மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், தேவைப்படும் இடத்தில் தாங்குசுவர்களை உயர்த்தி கட்டிடவும் அறிவுறுத்தப்பட்டது. வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள வேலி அமைப்பினை எல்லையாக நிர்ணயித்து குளத்தின் தாங்கு சுவர் வரை மண் கொட்டி நிரப்பி செம்மண் மேற்பரப்பு அமைத்து புல் தரை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. 

வேலி அமைப்பின் கிழக்குபுறம் நீர்வழிகால்வாய் சாலையின் பக்கம் சுமார் 10'0" வரை நடைப்பாதை அமைப்பு ஏற்படுத்தி, விசாலமான பகுதி இருப்பின் இருக்கை அமைப்பு ஏற்படுத்திடவும், சுசீந்திரம் குளத்தின் முன்பகுதியில் பறவைகள் வந்து அமரும் வகையில் இரும்பிலான உயர் கண்காணிப்பு கோபுரம் அமைத்திடவும், மாவட்ட வன அலுவலகம் மூலம் ஒளிரும் பெயர் பலகை மற்றும் தகவல் பலகை அமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 
சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகராட்சி மூலம் சாலையின் எதிர்புறத்தினை சுத்தமாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. குளத்தின் கரையோரம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு DWLC committee மூலம் பொருள் வைத்திட மாவட்ட வன அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டது. பணியினை உனடியாக தொடங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory