» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!

சனி 29, மார்ச் 2025 11:46:22 AM (IST)

"தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றனார். 

அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஆண்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் 6% குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன. 

கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory