» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!

செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)

குமரி மாவட்டத்தில் 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளராக இருந்தவர் சுயம்புலிங்கம். கடந்த 2012 ஆம் ஆண்டு ரவி அசோகன் என்பவர் தனக்கு உரிமை பட்ட சொத்தின் ஆவணம் சான்றிட்ட நகல் வழங்க கோரி இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்த சுயம்புலிங்கத்திடம் கடந்த 18-12-2012 அன்று மனு சமர்ப்பித்து உள்ளார். மனுவை பெற்ற சார்பதிவாளர் சுயம்புலிங்கம் சான்றிட்ட மனு வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி அசோகன் அது குறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் அப்போது ஆய்வாளராக இருந்த ஆய்வாளர் சால்வன்துரை (தற்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்) வழக்குப்பதிவு செய்தார். அதன் பின்னர் அப்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுந்தர்ராஜ் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஓய்வு) ரவி அசோகன் சார்பதிவாளர் சுயம்புலிங்கம் கேட்ட 2000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது சார்பதிவாளர் சுயம்பு லிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். 

அதன்படி மேற்படி வழக்கை அப்போதைய ஆய்வாளர் ஹெக்டர் தர்மராஜ் (தற்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) புலன் விசாரணை செய்து 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடித்து இன்று 25-03-2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. 

தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் மேற்படி வழக்கில் சார் பதிவாளர் சுயம்புலிங்கத்திற்கு இரண்டு சட்ட பிரிவுகளுக்கு தலா மூன்று வருட சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory