» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அந்த சோதனையின் முடிவாக, அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு.
அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மக்கள் ஒதுக்குவார்கள்
இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல.ஆனால், எத்தனை கோடிகளை கொட்டினாலும், இனி தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
திங்கள் 17, மார்ச் 2025 5:41:33 PM (IST)

உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே அதிமுக தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
திங்கள் 17, மார்ச் 2025 5:26:31 PM (IST)

போராட்டம் தொடரும்: எவ்வளவு நாள்கள் கைது செய்வீர்கள்? அண்ணாமலை கேள்வி!!
திங்கள் 17, மார்ச் 2025 5:09:51 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 12:53:37 PM (IST)

மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் நகை அபேஸ்: 4 பெண்கள் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:19:41 PM (IST)

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:09:48 PM (IST)

VIJAIIIIIIMar 17, 2025 - 01:14:06 PM | Posted IP 162.1*****