» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 12:53:37 PM (IST)
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தினார்.
கோவிட் பேரிடருக்கு முன்பு இருந்தது போல் மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சேவையை வாபஸ் பெற்றது. ஆனால் கோவிட் முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க முன் வரவில்லை. இதன் காரணமாக பல தரப்பட்ட மக்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர மக்களுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைத்த காரணத்தால் இத்தரப்பு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியோர், மாணவர்கள் மற்றும் பல சேவைகள் புரியும் மக்களின் துயரை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மேல் குறிப்பிட்ட மக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினை அரசு ஈடு செய்ய வேண்டும். இவ்வாறு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்து வலியுறுத்தி உள்ளேன் " என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
திங்கள் 17, மார்ச் 2025 5:41:33 PM (IST)

உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே அதிமுக தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
திங்கள் 17, மார்ச் 2025 5:26:31 PM (IST)

போராட்டம் தொடரும்: எவ்வளவு நாள்கள் கைது செய்வீர்கள்? அண்ணாமலை கேள்வி!!
திங்கள் 17, மார்ச் 2025 5:09:51 PM (IST)

மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் நகை அபேஸ்: 4 பெண்கள் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:19:41 PM (IST)

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:09:48 PM (IST)

நெல்லையில் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திங்கள் 17, மார்ச் 2025 12:06:15 PM (IST)
