» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு அடி-உதை : நெல்லையில் பரபரப்பு
சனி 15, மார்ச் 2025 8:20:41 PM (IST)
நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரை உறவினர்கள் சரமாரி அடி-உதை கொடுத்து ஆட்டோவை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை தச்சநல்லூர் கணபதி மில் காலனியை சேர்ந்தவர் காமராஜ் மகன் ராஜ்குமார் (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் வழக்கமாக தச்சநல்லூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு சவாரிக்கு அழைத்து செல்வார். நேற்றும் அதேபோல் மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்துச்சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது ஒரு மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்றபோது பாலியல் ரீதியில் அந்த மாணவிக்கு ராஜ்குமார் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் ராஜ்குமாரை பிடித்து சரமாரி அடித்து உதைத்தனர். மேலும் அவரது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தன்னை தாக்கிய தாக அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராஜ்குமார் சிறுமிக்கு பாலியல் ெதாந்தரவு கொடுத்தது தொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராஜ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு விஸ்டாம் பெட்டிகளுடன் சர்குலர் ரயில் இயக்க கோரிக்கை!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:59:01 PM (IST)

தென் தமிழகத்தில் மார்ச் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ஞாயிறு 16, மார்ச் 2025 11:33:52 AM (IST)

தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும் : ஹெச்.ராஜா
ஞாயிறு 16, மார்ச் 2025 11:29:41 AM (IST)

திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? சீமான் கேள்வி!
சனி 15, மார்ச் 2025 5:49:34 PM (IST)

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 15, மார்ச் 2025 5:32:44 PM (IST)

ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சனி 15, மார்ச் 2025 5:18:39 PM (IST)
