» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

சனி 15, மார்ச் 2025 5:32:44 PM (IST)



திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட  மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பழங்குடியின மக்களுடன் மாவட்ட ஆட்சியர்  அழகுமீனா,    கலந்துரையாடினார்.

கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை  ஊராட்சி படுபாறை, வலியமலை, மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சியர்  ஆர்.அழகுமீனா,   நேரில் சந்தித்து, கலந்துரையாடி தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 

மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக அந்தப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ்  நில உரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவையான பேருந்து வசதி, மின்சார வசதி, மருத்துவகாப்பீடு, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உங்களுக்கு வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம்கள் நடத்தி உங்களின் தேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களுக்கு அதிகமான அளவில் கான்கீரிட் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. 

தொடர்ந்து தொடர்ந்து மோதிரமலை - குற்றியாறு வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள  தரைப்பாலம் 31.45 மீட்டர் நீளமுடையது. இந்த தரைபாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வார காலத்திற்கு மேல் ஆவதாலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு வேறு மாற்றுப் பாதை இல்லாததாலும் இத்தரைப்பாலத்தினை 16.6 மீட்டர் நீளத்தில் மூன்று கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக மாற்ற    ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் மாங்காமலை குக்கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் 3 வீடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் பயனாளிகள் கட்டுமான பணிகளை முடிக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியின் முதல் பல்லுயிர் பாதுகாப்பு மையம் கீரிப்பாறை பகுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,   தெரிவித்தார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் திருவாழி, திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, வன சரகர்கள் முருகேசன் (வேளிமலை), விஜயகுமார் (குலசேகரம்), திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory