» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க.வின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுமாக இருக்கிறது: அண்ணாமலை விமர்சனம்
சனி 15, மார்ச் 2025 3:30:26 PM (IST)
தி.மு.க.வின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம் என்று பஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க. அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தி.மு.க.வின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023ம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை இத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.?
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. தி.மு.க. அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் தி.மு.க. அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு விஸ்டாம் பெட்டிகளுடன் சர்குலர் ரயில் இயக்க கோரிக்கை!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:59:01 PM (IST)

தென் தமிழகத்தில் மார்ச் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ஞாயிறு 16, மார்ச் 2025 11:33:52 AM (IST)

தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும் : ஹெச்.ராஜா
ஞாயிறு 16, மார்ச் 2025 11:29:41 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு அடி-உதை : நெல்லையில் பரபரப்பு
சனி 15, மார்ச் 2025 8:20:41 PM (IST)

திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? சீமான் கேள்வி!
சனி 15, மார்ச் 2025 5:49:34 PM (IST)

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 15, மார்ச் 2025 5:32:44 PM (IST)
