» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் தங்கு தடையின்றி சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் : பா. ரஞ்சித் குற்றச்சாட்டு!!
சனி 15, பிப்ரவரி 2025 11:22:33 AM (IST)
தமிழகத்தில் சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடக்கின்றன என்பதை ஒப்புகொள்வீரா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது.இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி. அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 11:34:10 AM (IST)

கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: மார்ச் 10 முதல் த.வெ.க வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல்!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:22:58 PM (IST)

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)







