» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் கொள்ளை: நெல்லையில் பரபரப்பு

சனி 15, பிப்ரவரி 2025 10:25:14 AM (IST)

நெல்லையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் தச்சநல்லூர் ரவுண்டானா அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிறகு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் நேற்று மதியம் 12 மணியளவில் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரதது 870 மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நைசாக வந்து டாஸ்மாக் கடை ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory