» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யார் யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம்: அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:45:21 PM (IST)

யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி அளித்தார்.

காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்படவில்லை. ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆளுநரே வேண்டாம் என்கிறோமே. 

ஐஸ் என்று சொல்லுவோம் வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறை. இப்போது ஆளுநர்களை 4-வது கரமாக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பிரச்சனையை உருவாக்குவதற்காக தொடர்ந்து எதிராக செயல்படுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.

ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்திருக்கிறது. தி.மு.க. பார்த்திருக்கிறது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory