» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் :‍ தமிழ்நாடு அரசு உத்தரவு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 5:55:13 PM (IST)

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors


CSC Computer Education







Thoothukudi Business Directory