» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)
வைகை, பல்லவன் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்தும், காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்தும் சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் என்பதால், இரு மார்க்கங்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பயணம் செய்கின்றனர்.
இதனால், முன்பதிவு பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. எனவே, பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12636/12635) மற்றும் காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12606/12605) ஆகிய ரயில்களில் ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி வருகிற மே மாதம் 11-ம் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன்பின், இந்த ரயில்களில் 3 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த தவறுகளும் இல்லை : செந்தில் பாலாஜி விளக்கம்
வெள்ளி 14, மார்ச் 2025 5:22:16 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

சீமான் வீட்டுப் பணியாளர், பாதுகாவலருக்கு ஜாமீன் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 5:29:07 PM (IST)
