» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பூதப்பாண்டி கோவில் தேரோட்டம்: தோவாளை வட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை!
சனி 8, பிப்ரவரி 2025 5:48:08 PM (IST)
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி தோவாளை வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணக்கவும், நிதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் தகவலின் படியும்தோவாளை வட்டம், பூதப்பாண்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இத்திருவிழாவானது 02.02.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச நட்சத்திரத்தின் முந்தைய நாளான (9-ம் நாள் திருவிழா) 10.02.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
10.02.2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 பிப்ரவரி திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.02.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 10.02.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

சீமான் வீட்டுப் பணியாளர், பாதுகாவலருக்கு ஜாமீன் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 5:29:07 PM (IST)
