» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழப்பு!

சனி 8, பிப்ரவரி 2025 5:31:16 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.

மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் விதிப்படி ஒரு வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அளித்த டெபாசிட் பணம் திருப்பி வழங்கப்படும். இல்லை என்றால் டெபாசிட்டை இழப்பார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில 1,54,657 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் டெபாசிட் பெற வேண்டுமென்றால் 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் சுமார் 1904 வாக்குகளில் டெபாசிட்டை இழந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory