» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிம வளக் கொள்ளையை தடுக்க தீவிர நடவடிக்கை : டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜனவரி 2025 5:46:14 PM (IST)
கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெபகர் அலி, பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
திருமயம் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து இயற்கை வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் சமூக விரோதிகள் மீது வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வந்த ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அது தொடர்பாக புகார் அளிக்கும் இயற்கை ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறியதே ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)
